செவிலியர்கள் போராட்டம் தொடரும் நிலையில் முதலமைச்சருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களுடன் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வெகு நேரம் போராட்டம் நடத்தியதால், தாகத்துக்கு
குடிநீர் வாங்க வெளியே சென்ற செவிலியர்கள் மீண்டும் டிஎம்எஸ் வளாகத்துக்குள் நுழைய முயன்ற போது, அவர்களை மீண்டும் உள்ளே அனுமதிக்க போலீஸார் மறுப்பு தெரிவித்தனர். இதனால்,
போலீஸ் அனுமதி மறுத்ததைக் கண்டித்து டி.எம்.எஸ் அலுவலக வாயிலில் அமர்ந்து செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே செவிலியர்களின் பிரச்னை குறித்து பேசுவதற்காக, சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.



