தினகரன் கோஷ்டியில் இருந்த எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா , புதுவை கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அணிக்கு தாவினர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு ஊர்வலம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது, தினகரன் அணியில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், புதுச்சேரி எம்.பி. கோகுல கிருஷ்ணன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், இவர்கள் மூவரும் தற்போது இ.பி.எஸ்–ஓ.பி.எஸ். அணியில் இணைந்துள்ளனர்.
இதுவரை தினகரனுக்கு ஆதரவளித்து வந்த இவர்கள் 3 பேர் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



