திருவில்லிபுத்தூர் அருகே… ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு!

Published:

python-in-srivilliputhur1
python-in-srivilliputhur1

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது சுந்தரபாண்டியம் அகத்தாபட்டி கிராமம். இந்தப் பகுதியில் இரவு நேரத்தில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு திடீரென்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அந்தப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர்.

ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்தது குறித்து வத்திராயிருப்பு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஊருக்குள் பதுங்கியிருந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டு, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட மலைப்பாம்பை, வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சிமலை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்ததால் அந்தப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

Related articles

Recent articles

spot_img