
தென்தமிழகத்தில் முதன்முறையாக பார்கின்சன் எனும் நடுக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்க்கு ஆழ்மூளை தூண்டுதல் எனும் சிகிச்சை மூலம் குணப்படுத்தி அப்போலோ மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பார்கின்சன் நோய் எனும் நடுக்குவாதம், தளர்ச்சி உள்ளிட்டவைகளால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மூளையில் ஏற்படும் பயம் காரணமாகவே இந்த நடுக்குவாதம் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுமிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கு தற்காலிகமாக மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியுமே தவிர நிரந்தரத் தீர்வு இதுவரை இல்லை.
நோய்க்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை அப்போலோ மருத்துவர்கள் ஆழ்மூளை தூண்டுதல் என்னும் சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர்.
மேலும் நடுக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த முதியவருக்கு ஆள்மூளை தூண்டுதல் அறுவை சிகிச்சை மூலம் மயக்க மருந்து செலுத்தாமல் ஆழ் மூளை சிகிச்சை அளிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.