
ஹிந்துக்கள் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில், மாடுகளை பலி கொடுக்கும் போராட்டம் என்று அறிவித்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான எஸ்டிபிஐ., மீது புகார் கொடுக்கப் பட்டுள்ளது என்று நெல்லையைச் சேர்ந்த இந்துமுன்னணி அமைப்பின் வழக்குரைஞர் கா.குற்றாலநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது…
நான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன் இன்று 26.12.2020 மதியம் 12.30 மணிக்கு சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருந்த போது எஸ்டிபிஐ கட்சியின் பாளை சட்டமன்ற தொகுதி என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ள போஸ்டரில் ” பஜார் மாடு பலி கொடுக்கும் போராட்டம் ” என்ற தலைப்பில் ‘ சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்து இல்லையேல் மாடுகளை அறுத்து பலியிடும் போராட்டம் விரைவில் நடைபெறும் ‘ என குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.
அதன் இணைய தொடர்பு குறீயீடு https://m.facebook.com/story.php?story_fbid=733184884279416&id=100027637337763 ஆகும்.
சமூக வலைதளம் மட்டுமன்றி இந்த சுவரொட்டிகள் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொதுவாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் கோசாலைகளில் ஒப்படைப்பது தான் சட்டப்படியான நடைமுறை. அதனை வெட்டுவோம் எனக் கூறுவதற்கு சட்டப்படியாக யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாடுகளை வெட்டுவோம் என்பது ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் மாட்டினை வெட்டுவோம் எனக்கூறி மாட்டினை தெய்வமாக வணங்கும் இந்துக்களுக்கும் அதனை வெட்டும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும். இந்துக்கள் கோமாதா என புனிதமாக வணங்கும் மாட்டை வெட்டுவோம் என கூறி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளதோடு இருதரப்பினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்தி மதக்கலவரத்தை தூண்டும் கெட்ட எண்ணத்துடன் வேண்டுமென்றே இந்த பதிவுகள் இடப்பட்டுள்ளன.
இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. என்று குறிப்பிட்டுள்ளார்.