தைப்பூசம் அரசு விடுமுறை: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

சற்றுமுன்
murugar-2
murugar-2

இனி தைப்பூசத்துக்கும் பொது விடுமுறை என முதல்வர் அதிரடி அறிவிப்பு!

தீபாவளி பொங்கல் கிறிஸ்துமஸ் ரம்ஜான் உள்பட பல பண்டிகைகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு பொது விடுமுறை விடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் தைப்பூசத்துக்கு பொது விடுமுறை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

cm-2

வடலூரிலும், மற்ற முருகன் ஆலயங்களிலும் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். முருக பக்தர்கள் இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்

இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட இருப்பதை அடுத்து அன்றைய தினம் பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்து சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஆண்டு மட்டுமன்றி இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

இதனை அடுத்து முருக பக்தர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி கூறி வருகின்றனர்.

தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி என பாஜக பிரமுகர் நிர்மல்குமார் டுவீட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.