
மதுரை: மதுரை முத்துப்பட்டி அருகே புதுக்குளம்பகுதியில் நடந்து செல்வோரை கடித்து குதறும் தெருநாய்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அப்பகுதி பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் முத்துப்பட்டி அருகே புதுக்குளம் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் , அப்பகுதியில் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் என்று நடந்து செல்பவர்களை கடிப்பதால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சஞ்சீவ குமார் சிறுவனை நாய் கடித்து படுகாயமடைந்ததில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களிடையே கோரிக்கையாக உள்ளது. இன்று ஐந்து பேரை கடித்த நாய் கடித்துவிட்டது.
இதற்கு காரணம் இப்பகுதியில் குடிகாரர்களின் தொந்தரவு அதிகம் அவர்கள் சாப்பிட்டுவிட்டு போடும் பொருட்களை தின்று வர நாய்கள் போட்டி போட்டு வரும்போது பொதுமக்களைக் கடித்துவிடுகிறது என்கின்றனர்.