
மேற்குத் தொடர்ச்சி மலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் மட்டும் இன்று அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை விலக்கிக் கொள்ளப் பட்டது.
கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் இரவு வரை மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்தனர்.
பின்னர் இன்று காலை பெரிதாக மழைப் பொழிவு இல்லாத நிலையில், அருவியில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து, சுற்ற்லா பயணிகள் குளிக்க அனுமதிக்கப் பட்டனர். இதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவர்.