
சென்னையில் ரேசன் கடை மேற்பார்வையாளர் ஒருவர் மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பணத்தை பாலியல் தொழிலாளியிடம் தொலைத்து விட்டு , கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் 2 ரேசன் கடைகளுக்கு மேற்பார்வையாளராக உள்ளார். இவரிடம் மக்களுக்கு வழங்க வேண்டிய 5 லட்சம் ரூபாய் பொங்கல் பணம் இருந்துள்ளது.
சம்பவத்தன்று பாஸ்கரன் வீட்டிற்கு செல்லாமல் பாலியல் தொழிலாளியுடன் பாரிமுனை சென்றுள்ளார். அங்கு அவளுடன் இருந்துவிட்டு மறுநாள் வீடு திரும்பி உள்ளார்.
அப்போது தான் பையில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் காணாமல் போனதை உணர்ந்த அவர் , இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய் விடும் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அங்கு உண்மையை சொல்லாமல் தான் கடத்தப்பட்டதாகவும் , அப்போது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் நாடகம் ஆடியுள்ளார்.
தீவிர விசாரணையில் உண்மையை தெரிந்து கொண்ட போலீசார் , பாஸ்கரனை கடுமையாக எச்சரித்துள்ளனர். மேலும் ரூ 5 லட்சத்துடன் மாயமான பாலியல் தொழிலாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.