
தேனி அரண்மனைப்புதுாரில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு லட்சுமி மீது பழனிச்செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜன.,20ல் தேனி அரண்மனைப்புதுாரில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில் பூதிப்புரம் லட்சுமி பேசும்போது, துணை முதல்வர் எங்கள் ஊர் பக்கம் வந்தால் அவரை கொலையே பண்ணிடுவேன்” என பேசினார்.
இதுகுறித்து போலீசில் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள், பூதிப்புரம் நிர்வாகிகள் 6 பேர் புகார் அளித்தனர். அன்னஞ்சியை சேர்ந்த வேல்முருகன் புகாரில், லட்சுமி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.