
வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கேட்டு சலித்துப் போன தல ரசிகர்கள் வேறு வழியே இல்லாமல் திருச்செந்தூர் முருகனிடம் அப்டேட் கேட்டு சென்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கிறார். இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தினமும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வகையில் வலிமை அப்டேட் கேட்டு தயாரிப்பாளரையும் படம் சம்பந்தப்பட்ட நடிகர்களையும் தொந்தரவு செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நேரடியாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சமூகவலைதளத்தில் கேலி கிண்டல் செய்தார்கள். அவரும் அஜித் பட அப்டேட் கொடுப்பார் என்று பார்த்தால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை தொடர்ந்து கொடுத்து வந்ததால் ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர் போல.
இந்நிலையில் தென்காசி மாவட்ட அஜித் ரசிகர்கள் வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா என பேனர் எழுதி, கோவில் முன்பு நின்று புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதான் தற்போது சினிமா வட்டாரத்தில் சிரிப்பை ஏற்படுத்தி உள்ள விஷயமாகும். இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே இல்லை. அதிலும் தல ரசிகர்கள் முதல் இடம் தான் என கொண்டாடி வருகின்றனர்.