
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு 15 வயதான மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் திடீரென சிறுமி காணாமல் போனதை அடுத்து பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இதனை அடுத்து காவல் ஆய்வாளர் பரமேஸ்வரன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சிறுமி குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த செல்வம் என்ற நபர் தான் சிறுமியை கடத்தியதாகவும், அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதனை அடுத்து போலீசார் செல்வத்தை பிடித்து விசாரித்து உள்ளனர். அதில் செல்வம் அந்த சிறுமியை கடத்தி திருமணம் செய்தது உறுதியானது. இதனை அடுத்து போலீசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.