ஏப்ரல் 20, 2021, 3:31 மணி செவ்வாய்க்கிழமை
More

  செல்போன் பறிப்பு… கஞ்சா சிறுவர்கள் கைது… கிரைம் ரவுண்ட்ஸ்!

  crimescene - 1
  crime-imgae

  மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் செல்போன் பறித்த 4 பேர் கைது

  மதுரை: ஜெய்ஹிந்புரத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த நான்குபேரை பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை சோலைஅழகுபுரம்  முதல் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் முத்துக்குமார்29.இவர் ராமையா தெருவில் உறவினர் வருகைக்காககாக காத்து இருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்துக்குமார் ஜெய்ஹிந்துபுரம் போலீசில்ஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவா நகர் கருமாரி அம்மன் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சிவகுமார் 39, சிவனாண்டி 32, கார்த்தி 28 ,ஆறுமுகம் 40 ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

  மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தவர் சாலையோரம் மயங்கி விழுந்து பலி

  மதுரை: மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தவர் சாலையோரம் மயங்கி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஜெய்ஹிந்த்புரம் காஜா தெருவை சேர்ந்தவர் பூவலிங்கம் 60 .

  இவர்மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில்  கீரைத்துறை நாகுப்பிள்ளை தோப்பு அருகே நடந்து சென்ற போது மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில்யில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில்  கீரைத்துரைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் முன்விரோதத்தில் தாக்குதல் : கணவன்-மனைவி கைது 

  மதுரை: சுந்தரராஜபுரம் ஏ.ஏ.ரோடு வைசேர்ந்தவர் மனோகரன் 40 .இவருக்கும் இவருடைய சகோதரர் கண்ணனுக்கும் இடையே இடப்பி பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கண்ணனும் அவர் மனைவி பூமாதேவியும் மனோகரனை தரக்குறைவாக பேசி தாக்க முற்பட்டனர். இதுதொடர்பாக மனோகரன் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர்.

  கீரைத்துறையில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை

  மதுரை : கீழே துறையில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை குயவர்பாளையம் வாய்க்கால் தெருவில் வசித்து வருபவர் மேரி 75 .இவர்கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்தது. வீட்டில்பீரோவில் வைத்திருந்த பணம் ரூபாய் பதினோராயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக மேரி கீரைத்துரைபோலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

  வைகை வடகரையில் கஞ்சாவுடன் இரண்டுசிறுவர்கள்உட்பட மூன்றுபேர் கைது. 

  மதுரை: மதுரை வைகை வடகரை கஞ்சா விற்பனை செய்த இரண்டுசிறுவர்கள் உட்படமூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை வைகை வடகரை ஓபுளா படித்துறை சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்வதாக மதிச்சியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்பனை செய்த ஆர்.ஆர். மண்டபத்தைச் சேர்ந்த மார்க்கண்ட பூபதி 22 ,ஆழ்வார்புரம் வைகை வடகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ,அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுவன் ஆகியமூவரையும்கைது செய்தனர்.,. தப்பி ஓடிய கார்த்திக் என்ற காக்காவலிப்பு கார்த்தி செல்வகணபதி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »