
தஞ்சையில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண் ஒருவர் காவலர்களை மிரட்டும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது .
கொரோனா பரவலால் பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் தன்னால் அபராதம் கட்ட முடியாது என்று தெனாவெட்டாக பேசும் வீடியோ வைரல் ஆகிவருகின்றது.
அந்த பெண் போலீசாரை பார்த்து ” இத்துணுண்டு மாஸ்க்குக்கு 200 ரூபாய் வாங்குறீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்ல ” என்று பைக்கில் அமர்ந்தபடியே தெனாவெட்டாக கூறுகிறார்.

அதற்கு அருகில் இருந்த காவலர் அதை கலெக்டரிடம் போய் கேளு மா என்று கூறினார் . அதற்கு அந்த பெண்ணோ ” யோவ் கலெக்டர கூப்பிடு அவனை நானே கேட்குறேன்… எவனா இருந்தா என்ன நா மானத்தை வாங்கிடுவேன் ” என்று மரியாதை இன்றி வசைபாடினார் …

இதனை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த மற்றொரு காவலரை பார்த்து ” ஹோ வீடியோ எடுக்குரியா எடு என்னவேணாலும் எடு… என்ன facebook -ல போட போறியா, போடு நானே ஷேர் பண்றேன் ” நானும் ரவுடி தான், உள்ள போட போறியா… எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல என்று கூறிவிட்டு, மாஸ்க்க உள்ள தான் வெச்சுருக்கே… எனக்கு மூச்சு பிரச்னை இருக்கு… . என்று மூச்சே விடாமல் பேசிவிட்டு சென்றார் அந்தப் பெண்.

பொது இடங்களில் இதுபோன்று விதிகளை மீறுவது தரக்குறைவாக நடந்து கொள்வது, காவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரை தரக்குறைவாக ஒருமையில் பேசுவது இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வீடியோவுக்கு மக்கள் சமூகத் தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.