
மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு, பிரச்சனைக்கு குறைவே கிடையாது. உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதை தீர்த்து வைக்கும் ஒரு சிறந்த வழி.
தொட்டாசிணுங்கி செடியை தொடர்ந்து இந்த செடியை 48 நாட்கள், உங்களது கோரிக்கைகளை வைத்து, தொட்டு வந்தாலே போதும். நீங்கள் நினைத்ததெல்லாம் வெற்றிதான்!
சக்தி வாய்ந்த வேப்ப மரம், வன்னி மரம், துளசிச்செடி இவைகளுக்கு இருக்கின்ற அதே சக்தி இந்த தொட்டாசிணுங்கி செடிக்கும் கட்டாயம் உள்ளது. இதனால் மாத விலக்கு காலங்களில் பெண்கள் இந்த தொட்டாசிணுங்கி செடியை கட்டாயம் தொடக்கூடாது.
சில பேருக்கு வாழ்க்கையில் பல தோல்விகள் பின் தொடர்ந்து கொண்டு வந்தே இருக்கும். நிறைய இன்டர்வியூக்கு போயிட்டே இருப்பாங்க, வேலை கிடைக்காது. திருமணத்திற்காக வரன் பார்க்கச் செல்வார்கள். அமையவே அமையாது! வீட்டில் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். அல்லது பண கஷ்டம் இருக்கும். அல்லது யாருக்காவது கடன் தொகையை, பணமாக கொடுத்து ஏமாந்தவர்கள் ஆக இருக்கலாம். அல்லது நம் குடும்பத்தில் யாராவது ஒருவர் நம் பேச்சை கேட்காமல் குறுக்குவழியில் சென்று, தவறான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கலாம். இப்படி உங்களுக்கு இருக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி. அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முதலில் மனதார குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இதோடு சேர்த்து உங்கள் வீட்டில் இருக்கும் தொட்டாசிணுங்கி செடியாக இருந்தாலும் சரி. ரோட்டில் இருக்கும் தொட்டாசிணிங்கியாக இருந்தாலும் சரி. அதை தினம்தோறும் உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை வைத்து, 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு வர வேண்டும். அந்தச் செடியானது நீங்க தொட்டு உடனே சிலுக்கிற மாதிரி ஒரு முறை தொட்டால் போதும்.
உங்களுடைய கணவரோ அல்லது உங்களுடைய குழந்தைகளோ உங்கள் சொல் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்களது பெயரை உச்சரித்து அவர்கள் உங்களுடைய பேச்சை கேட்க வேண்டும் என்று நினைத்து, 48 நாட்கள் இந்த செடியை தொட்டு வணங்கி வந்தாலே போதும். நீங்க எந்த பேரைச் சொல்லி, வேண்டுதல் வைக்கிறீர்களோ, அவர்களிடத்தில் மாற்றத்தை கண்கூடாக காணலாம்.
அதிகப்படியான பணம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அதிகப்படியான லாபத்தை தரக்கூடிய தொழில் அமைய வேண்டும் என்றும், அதிகப்படியான சம்பளம் கிடைக்கக்கூடிய வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்து கூட இந்த தொட்டாசிணுங்கி செடியை 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு பிரார்த்தனை செய்து பாருங்கள்.
நீங்கள் வேண்டியது நிச்சயமாக நடக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எப்படிப்பட்ட வேண்டுதலை வேண்டுமென்றாலும் இந்த செடியிடம் வைக்கலாம். அடுத்தவங்களுக்கு, கெடுதல் நினைக்கிற மாதிரி வேண்டிய கட்டாயம் நடக்காது. நன்மை தரக்கூடிய வேண்டுதலை வைத்தால் நிச்சயம் நடக்கும்..
ஆனால், இந்த தொட்டாச்சிணுங்கி செடியை தொடும் 48 நாட்களும் நீங்களும், அசைவம் ஏதும் சாப்பிடாமல், சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
48 நாட்களும் ஒரே கோரிக்கையை தான் வைக்க வேண்டும். நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு, வாழ்க்கையின் சாதனையாளர்களாக மாற வாழ்த்துக்கள்.