
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்தில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில திருகோவில் கர்ப்பகிரகத்தின் மேற்கூரை முழுவதும் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளது.
இந்த தீ விபத்து அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பூஜாரிகளின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் இந்த தீ விபத்தினால் தெய்வ குற்றம் ஏற்ப்பட்டு நாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதால், திருக்கோயிலில் உடனடியாக தேவப்பிரச்னம் பார்த்து அதன்படி பரிகார பூஜைகள் செய்யப் படவேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.