நெல்லை மாவட்டம் கடையம் மற்றும் பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தென்காசி அடுத்த கடையம் அருகே உள்ள பெற்றான்பிள்ளைகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராசு. விவசாயி. இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி திடீரென ராசுவின் மாட்டு தொழுவத்திற்குள் புகுந்து, அங்கிருந்த 6மாத கன்றுக்குட்டியை அடித்து கொன்று இழுத்து சென்று விட்டது.இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று வியாழன் காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க சென்றனர். அப்போது அருவி அருகே உள்ள சோதனைசாவடி வனப்பகுதியில் சுற்றி திரிந்த மிளாவை சிறுத்தைப்புலி ஒன்று கடித்துக் கொன்றுதூக்கி சென்றது. இதனைப்பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Popular Categories



