நண்பர்கள் கூடவும் இரு.. அந்தரங்க வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டிய காதலன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Pornography
Pornography

கிருஷ்ணகிரி அருகே, சிறுமியுடன் நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக எடுத்த வீடியோவை வைத்து காதலன் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூலித்தொழிலாளி ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள வால்பாறையில் வாழ்ந்து வந்துள்ளார். 17 வயதான இவரது மகள், பக்கத்து ஊரான நெடுங்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்துவருகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், 32 வயதான சந்திரகணேஷ் என்ற உள்ளூரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவருடன் இந்த சிறுமி நெருங்கி பழகிவந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளைஞர் இந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் பலமுறை தனிமையில் இருந்தது மட்டும் இல்லாமல் நடப்பதை எல்லாம் சிறுமிக்கு தெரியாமல் அவரது செல்ஃபோனில் வீடியோவும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மே 26ஆம் தேதி அந்தச் சிறுமி, வீட்டின் பின்பக்கம் உள்ள ஒதுக்குப்புறமான இடத்திற்கு காலைக்கடன் கழிப்பதற்காக ஒதுங்கியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அப்போது சந்திரகணேஷ், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களான 20 வயது ஜீவா, 31 வயது ரமேஷ் ஆகியோருடன் அங்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியிடம் சந்திரகணேஷ் முதலில் தன்னுடனும், பிறகு நண்பர்களுடனும் தான் சொன்னபடி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என மிரட்டியுள்ளார்.

ஆனால் அதற்குச் சிறுமி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சந்திரகணேஷ், இருவரும் நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் காட்டி, தான் சொன்னபடி கேட்காவிட்டால் சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் கலக்கமடைந்த சிறுமி, அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனாலும், அடுத்தடுத்து நாட்களிலும் சிறுமியை சந்திரகணேஷ் மிரட்டி வந்துள்ளார்.

இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் நடக்கக் கூடாதது நடந்துவிடும் எனக் கருதிய சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். பெற்றோர் மகளை அழைத்துக்கொண்டு பர்கூர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின்பேரில் சந்திரகணேஷ், ஜீவா, ரமேஷ் ஆகியோர் மீது விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கற்பகம், வழக்குப் பதிவுசெய்து கைது செய்தார். சந்திரகணேஷிடம் இருந்த செல்ஃபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.