
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மனு அளிக்கப் பட்டது.
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரானா நிவாரணம் கோரி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு அளிக்கப் பட்டது.
அந்த வகையில், நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணுவிடம், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் கே.சங்கர் தலைமையில் ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் இசக்கிமுத்து, கலையரசன், செந்தில்குமார், துரை, சுடலைமுத்து ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா, சுடலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் மேலப்பாளையம் மண்டல தலைவர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதுபோல், தென்காசி மாவட்ட இந்து ஆட்டோ முன்னணி சார்பில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரனிடம் கொரோனா காலகட்டத்தில் இன்சுரன்ஸ், ரோடு டாக்ஸ் ஆகியவற்றாலும், குடும்பம் நடத்த நிதி சுமை காரணமாகவும், நிவாரணம் வழங்கக் கோரி மனு கொடுக்கப்பட்டது.
இதில், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் கோமதி சங்கர், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும், மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் எஸ் பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, செங்கோட்டை நகர தலைவர் மூர்த்தி, இந்து ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் செங்கோட்டை ஒன்றிய தலைவர் மணி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் பாலமுருகன், கடையம் ஒன்றிய தலைவர் தங்கராஜ், தென்காசி நகர தலைவர் பேச்சி, செங்கோட்டை நகர தலைவர் அருணாச்சலம், ஆய்க்குடி நகரத் தலைவர் கோப்பின் சரவணன், ஆய்க்குடி நகரச் செயலாளர் குமரேசன், செங்கோட்டை நகர செயலாளர் செல்வம், கற்குடி நகரச் செயலாளர்
இசக்கி துரை, தென்காசி நகர பொருளாளர்
சுப்புராஜ், தென்காசி நகர் ஆறுமுக கனி சிவசைலம் நகர் கடையம் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.