ரூ.4.5 லட்சத்தில் புதிய கழிப்பறை உள்பட நலத் திட்டங்கள்! மதுரையில் நிதி அமைச்சர்!

சற்றுமுன் மதுரை
minister thyagarajan in madurai 1 - 2026

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

 தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான   பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி வார்டு எண் 9   அருள்தாஸ் புரம் பகுதியில்  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை திறந்து வைத்தார்

minister thyagarajan in madurai 2 - 2026

தொடர்ந்து ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஒரு நாள் இலவச தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார் தொடர்ந்து வார்டு எண் 82 கந்தசாமி பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் 6 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையை திறந்துவைத்தார்

முதியோர் இல்லத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்டார் தொடர்ந்து மாநகராட்சி வார்டு எண் 81ல் 5 லட்சம் மதிப்பீட்டில் வைரவன் செட்டி தெருவில்  பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.