
கணவர் ஒருவர், இயற்கை உபாதை கழிக்க கண் விழித்த போது அவர் பார்த்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜோதிமணி என்ற நபர், திருச்சி உறையூர் செட்டித்தெருவில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 37 வயதான ஸ்ரீவித்யா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீவித்யா திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல், அனைவரும் ஒன்றாக தூங்க சென்றுள்ளனர்.
இந்நிலையில், இரவில் இயற்கை உபாதைக்காக அவரது கணவர் கண் விழித்த போது, அவர் பார்த்த காட்சி அவரை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. அவரது தலைக்கு அருகில் அவரது மனைவி ஸ்ரீவித்யா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்
இதுகுறித்து உடனடியாக உறையூர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ஸ்ரீவித்யாவின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் ஸ்ரீவித்யாவின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரை இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் ராஜா தான் திருடிய இருசக்கர வாகனங்களை திருச்சி மாவட்டம், மணப்பாறை சேர்ந்த பாபு என்பவரிடம், ஒப்படைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து பாபுவை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பாபுவின் செல்பேசியை எடுத்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் ஒரு பெண்ணிடம் தொடர்ந்து பேசி வருவது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இந்த திருட்டில் பெண்ணுக்கும் தொடர்பிருக்கலாம் என கருதிய போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை செய்தனர்.
அப்பொழுது அந்தப் பெண் தான் தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீவித்யா என்றும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாபுவுடன் பணிபுரிந்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அப்போது பாபுவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் ஸ்ரீவித்யா, பாபுவை தொடர்புகொண்டு போலீசார் தொடர்ந்து தன்னை விசாரணை செய்து வருவதால் தனது குடும்பத்தில் பிரச்சனை வரும் என்றும், உடனடியாக போலீசில் சரண் அடையும்படியும் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஸ்ரீவித்யா தொடர்ந்து போலீசார் தனக்கு நெருக்கடி தருவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.