September 28, 2021, 12:12 pm
More

  ARTICLE - SECTIONS

  உடல் எடை குறைய.. உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியது!

  Linseed - 1

  ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இந்த ஆளி விதை ஆசியா, அமெரிக்க, ஆப்ரிக்காவில் பாரம்பரிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட பொருளாகும்.

  இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம்.

  ஆனால் ஆளி விதையை பொடியாக்கி அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், அதிலிருக்கும் சத்துக்களை உடலால் முழுமையாக எளிதில் உறிஞ்ச முடியும்.

  இருவகை ஆளி விதைகள் உள்ளன; ஒன்று, மஞ்சள் மற்றொன்று காவி நிறம். காவி. ஆளி ஆயிரம் ஆண்டுகளாக உணவாக இருந்து வந்தாலும் அது சாயம், கால்நடை தீவனம் மற்றும் சாயத்தில், ஓர் உள்ளடங்கு பொருளாகத் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

  காவி ஆளியும் மஞ்சள் ஆளியும் ஒத்த ஊட்டச் சத்து மதிப்புள்ளதாகவும், சம அளவு குறுஞ்-சங்கிலி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்டதாகவும் திகழ்கின்றன. இதற்கு விதிவிலக்கு, சாலின் என்று அழைக்கப்படும் மஞ்சள் ஆளி; இதில் ஒமெகா-3 குறைவு, முற்றிலும் வேறுபட்ட எண்ணெயின் உயிரியல் கட்டமைப்பு உருவரை படிமம் கொண்டது.

  ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.

  உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாதபோது, அதிகமாக ஆளிவிதை உட்கொள்ளும்போது, குடல் அடைப்பு ஏற்பட நேரிடும். ஆளிவிதையின் எண்ணெயை சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

  ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

  100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன.

  இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி விடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

  மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும்.

  இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது. மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளிவிதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

  ஒருவரது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆளி விதையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்காமல் தடுக்கும்

  பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, கனிமச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். பொட்டாசியம் நரம்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்
  இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை வளமான அளவில் வைத்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்

  தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்.

  ஆளி விதையில் சி-க்ளுக்கோசைடுகள் வளமான அளவில் உள்ளது. இந்த பாலிபீனோலிக் பொருட்கள் லிப்பிட் பெராக்ஸிடேஷன், பிளேட்லெட் அக்ரேஜேஷன், மற்றும் கேப்பில்லரி ஊடுருவல் மற்றும் பலவீனம் ஆகியவற்றை தடுத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

  ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் அழற்சி நோய்களான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், சொரியாசிஸ் மற்றும் ஆட்டோ-இம்யூன் கோளாறான லூபஸ் போன்றவை வரைமல் தடுக்கும்.

  ஆளி விதையில் உள்ள லிக்னன்கள், அதாவது ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகள் காரணமாக ஹார்மோன் மாற்று சிகிச்சைக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு இறுதி மாதவிடாயை நெருங்கும் போது சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆளி விதையை பெண்கள் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், இந்த
  பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
  ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகளின் காரணமாக, ஆளி விதைகளில் உள்ள லிக்னன்கள் மாதவிடாய் நின்ற பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கின்றன. எனவே தினமும் பெண்கள் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுவது, வயதான காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

  கண்களில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, கண் நோய்களுள் ஒன்றான மாகுலர் திசு சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

  ஆளி விதை எண்ணெய் நகம் மற்றும் தலைமுடி வெடிப்பிற்கு சிகிச்சை அளித்து, நகம் உடைவது மற்றும் தலைமுடி வெடிப்பது போன்றவை தடுக்கப்படும். மேலும் ஆளி விதை எண்ணெய் ஸ்கால்ப்பில் ஏற்பட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும்.

  ஆளி விதை எண்ணெயை எடுத்து உங்கள் முடிக்கு மசாஜ் செய்து வரலாம். கூந்தல் முழுவதுமாக எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தவுடன் 20 நிமிடம் கழித்து முடியை ஆசிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முடி நன்கு அடர்த்தியாக வளர செய்யும்.

  ஆளிவிதை ஜெல்: தேவையான பொருட்கள், ஆளி விதை எண்ணெய் – 1/4 கப், நீர் – 2 கப், எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆளி விதை எண்ணையும், தண்ணீரையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்பு அது கெட்டியாகும் வரை சூடாக்கி, இறுதியில் எலுமிச்சை சாற்றை அதனுடன் சேர்த்து கலக்க வேண்டும். கெட்டியாகும் இந்த ஜெல்லை எடுத்து ஆறவைத்து உங்கள் முடிக்கு தடவலாம்.

  பயன்படுத்தும் முறை: இதை தினமும் தூங்கும் முன்பு உங்கள் கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது குறைந்து, முடி நன்கு வளர்ச்சி அடையும். முடி உடைதல் தடுக்கப்படும்.

  ஆளி விதையை நன்கு காயவைத்து அதை அரைத்து கொள்ளுங்கள். பின்பு இதை தயிருடன் கலந்து ஹேர் பேக் போல முடியின் வேர்க்கால்கள் வரை அப்ளை செய்யுங்கள். கூந்தல் முழுவதுமாக தடவி விட்டு, ஒரு அரை மணி நேரம் கழித்து முடியை அலசிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு இருமுறை செய்தால் முடி பளபளவென இருக்கும், முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

  ஆளி விதையை பொடியாக்கி சுத்தமான தண்ணியில ஊறவைத்தால் அது குழம்பாகிடும். அப்புறம், அதை வடித்து எடுத்து கண்ணில விட்டோம் என்றால் கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிடும்!

  ஆளி விதை மாதிரி நார்ச்சத்து நிறைஞ்ச உணவுகள நாம ஒரேயடியா உணவுல சேர்த்துக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாதான் உட்கொள்ளணும்.
  இதைசாப்பிடும் நாட்களில அதிகமா தண்ணீர் குடிக்க ங. இல்லையென்றால் மலச்சிக்கல், வாய்வு மாதிரியான உபாதைகள் உண்டாகும். கர்ப்ப காலங்களில் ஆரம்ப கட்டத்துல இருக்குற பெண்கள் இதை உட்கொள்வதை தவிர்த்து விடவேண்டும்.

  சப்பாத்தி மாவு, தோசை மாவுகளில் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

  மில்க் ஷேக், ரைத்தா, ஓட்ஸ், கஞ்சி, சூப், சாலட், மோர், குழம்பு ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

  ஆளிவிதை மில்க் ஷேக்
  தேங்காய் பால் – 1 கப்
  ஆளிவிதைப் பொடி – 2 டீஸ்பூன்
  ஸ்ட்ராபெர்ரி – 1 கப்
  வாழைப்பழம் – 2 துண்டுகள்
  தேன் – 2 டீஸ்பூன்.

  செய்முறை :

  மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
  பிறகு, அதை ஒரு கிளாஸில் ஊற்றி , தேவைப்பட்டால் உலர் பழங்கள், துண்டாக நறுக்கியப் பழங்களை சேர்த்தும் பருகலாம்.
  ஆளிவிதை மில்க் ஷேக் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அனைத்தையும் தரும்.

  தினமும் 30 கிராம் அளவு தொடர்ந்து ஆளி விதைகளை ஆறு மாதங்களுக்கு உண்பவர்களுக்கு ரத்த அழுத்தத்தை உருவாக்கக் கூடிய கூறுகள் குறைந்து காணப்படுவதுடன் அவற்றிலிருந்து தப்பிப்பதற்கு கூடிய பாதுகாப்பும் இருக்கிறது

  பெரும்பாலும் ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் டயட் முறையை மேற்கொள்வார்கள். அவர்களுக்கும் மற்றும் சராசரி மக்களும் கூட ஆளி விதையை உங்கள் உணவில் எளிதாக இணைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, தயிருடன் ஆளி விதையை சேர்த்து பருகலாம் அல்லது பழங்களை உண்ணும் பொழுது அதனுடன் ஆளி விதைகளை தெளித்து சாப்பிடலாம் மற்றும் பகல் நேரங்களில் சப்பாத்தி, பிரட் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள் இந்த ஆளி விதைகளை சேர்த்து உண்ணலாம். இதை எளிமையான ஒன்றாகும். இதனை நன்றாக ஊறவைத்து ஒரு சவ்வு தன்மையுடன் அது இருக்கும் பொழுது பயன்படுத்துவதுதான் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதாகும்

  ஆளி விதையில் இருக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க உதவும். ஆளி விதையில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால், இது மூளையின் வளர்ச்சியையும், ஆரோகியத்தையும் அதிகரிக்க உதவுகின்றது.

  நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஒரேடியாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. சிறிது சிறிதாகத்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்

  இரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலைகள்
  ஆளிவிதைகள் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு
  நோயினால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொள்பவர்கள் இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  ஆளிவிதைகள் இரத்த அழுத்தத்தை அதிகமாக குறைக்கும். இதனால் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொள்பவர்கள் கண்டிப்பதாக இதனை தவிர்க்க வேண்டும்.

  ஆளிவிதைகள் இரத்தத்தை மெதுவாக தான் உறைய வைக்கும். இதனால் இரத்தப்போக்கு கோளாறுகள் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரத்திற்கு முன்பும் ஆளி விதைகளை உட்கொள்ளக் கூடாது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,481FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-