
அதிக வரதட்சணை கேட்டு பெண் வழக்கறிஞரை, வீட்டை விட்டு வெளியே தள்ளி கேட்டை பூட்டி சென்ற கணவரிடம் கொட்டும் மழையில் பெண் வக்கீல் கெஞ்சி கதறி போராட்டம் நடத்திய காட்சி கல் மனதையும் கரைய செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த திருத்துவபுரத்தை சேர்ந்தவர் மொழிப்போர் தியாகி ஜேம்ஸ். இவரது மகள் வக்கீல் பிரியதர்ஷினி (வயது 28). இவருக்கும் முளகுமூடு பகுதியை சேர்ந்த நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் ராஜ ஷெரின் என்பவருக்கும் கடநத் 2020ஆம் வருடம் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 101 சவரன் நகை மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது
வக்கீல் பிரியதர்ஷினிக்கு திருமணமான நாளில் இருந்து அதிகமாக வரதட்சணையாக பணம் மற்றும் நகைகள் கேட்டு மாமனார் எலியாஸ், மாமியார் பேபி சரோஜா, மற்றும் கணவரின் சகோதரி நிர்மல் சுபி அவரது கணவர் ஸ்டாலின் பிரபு ஆகியோர் தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளளனர்.

அவரை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதையடுத்து பிரியதர்ஷினி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் நீதிமன்ற ஆலோசனையின்படி போலீசார் இருவரையும் தனியாக வீடு எடுத்து வாழ அறிவுரை கூறினார்.

அதன்படி நாகர்கோவில் கோணம் அருகாமையில் தனியாக வீடு எடுத்து பிரியாதர்ஷினியும் அவரது கணவரும் குடியேறினர்.
இந்நிலையில் நள்ளிரவில் அவரை தனியாக தவிக்க விட்டு விட்டு ராஜ ஷெரின் தனது தந்தை வீட்டில் வந்து அமர்ந்து கொண்டார்.
மேலும் பேராசிரியருக்கு பல பெண்களிடம் சாவுகாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது வக்கீல் மனைவியை விட்டு அவ்வப்போது பல பெண்களிடம் சென்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையலி வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்துள்ளார். இந்நிலையில் தனது கணவனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது மட்டுமல்லாமல், நண்பர்கள் மூலமும் தொடர்பு கொண்டுள்ளதோடு பல இடங்களில் தேடியுள்ளார்.
தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த பிரியதர்ஷினி தனது கணவர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ராஜ ஷெரின் அங்கு இருப்பதை பார்த்து என்னை ஏன் இவ்வாறு ஏமாற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.

உடனே அவரது கணவர் ராஜ ஷெரின், தந்தை, தாயார் ஆகியோர் சேர்ந்து வக்கீல் பிரியதர்ஷினியை வெளியே தள்ளி வீட்டின் கேட்டை பூட்டி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல் பிரியதர்ஷினி என்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் கேட்டை திறந்து விடுங்கள் என கதறி அழுதார் .

ஆனால் அவர்கள் திறந்து விடுவதாக இல்லை இதனால் வக்கீல் பிரியதர்ஷினி சாலையில் அமர்ந்து அழுது புரண்டார். இந்நிலையில் தக்கலை போலீசார் விரைந்து வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் பிரியதர்ஷினி எனது கணவர் எனக்கு தேவை அவருடன் சேர்த்து வையுங்கள் என கூறி அழுது கொண்டே இருந்த காட்சி அனைவரின் மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



