Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்ஒரு ஆண் குழந்தைக்கு தாயான எமி ஜாக்சன் காதலனைப் பிரிகிறாரா?

ஒரு ஆண் குழந்தைக்கு தாயான எமி ஜாக்சன் காதலனைப் பிரிகிறாரா?

- Advertisement -
- Advertisement -

நடிகை எமி ஜாக்சன் தனது காதலரை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழில், மதராச பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை அடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுஷுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதயநிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0 உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இவரும் இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவும் (George Panayitou) காதலித்து வந்தனர். இதில் எமி ஜாக்சன் கர்ப்பமானார். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.
2019-ம் ஆண்டு எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆனட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து ஜார்ஜுடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் திடீரென்று நீக்கியுள்ளார்.

இதனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி எமி ஜாக்சன் ஏதும் தெரிவிக்கவில்லை

- Advertisement -