காலையில் வெளியே போயிட்டு வருவதற்குள்.. வீட்டை திறந்து கொள்ளை!

robbery
robbery

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் மனைவி கார்த்திகா(35) இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில் கார்த்திகா மற்றும் அவரின் கணவர், பிள்ளை அனைவரும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு ஆதார் திருத்தம் செய்ய திருத்துறைப்பூண்டி தாலுக்கா ஆபீஸ் சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பியுள்ளனர். லேட்டாக வந்த அசதியால் அப்படியே தூங்கி விட்டனர்.

காலையில் கண்விழித்து பார்த்தபோது வீட்டின் கொல்லையில் இருந்த பாறை வீட்டிற்குள் இருந்ததை கண்டு மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் காசு மாலை, 5 பவுன் மாங்கா மாலை, 2பவுன் தோடு ஜிமிக்கி, 1 பவுன் செயின், 1 பவுன் குழந்தைகளின் தோடு உட்பட மொத்தம் 15பவுன் நகை, ஒரு வெள்ளி டம்ளர், 50ஆயிரம் மதிப்புள்ள ஐ போன், 8ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து கார்த்திகா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்து அங்குவந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் அழகேசன், மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இந்த திருட்டு சம்பவம் நேற்று பட்டபகலில் நடந்துள்ளது.

இதில் முன்பக்க கதவை பாறையால் நெம்பி உள்ளே சென்று திருடிவிட்டு அதேமாதிரி கதவை மூடி சென்றுள்ளனர். இதனை தெரியாமல் கார்த்திகா குடும்பத்தினர் நள்ளிரவில் வந்த அசதியில் அறியாமல் தூங்கியுள்ளனர் என்று தெரியவந்தது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories