செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடன்! துரத்திப் பிடித்த பெண் காவலர்! குவியும் பாராட்டு!

indrani
indrani

பேருந்தில் முதியவரிடம் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய திருடனை பெண் காவலர் துரத்தி பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை பார்க் டவுன் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன்(70). முதியவரான இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து ஏ1 பேருந்து மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாமோதரன் இறங்கும் போது மற்றொரு பயணி ஒருவர் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடினார்.

தாமோதரன் திருடன் என சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் செல்போன் பறித்து கொண்டு ஓடிய நபரை துரத்தி சென்றனர். அப்போது அந்த வழியாக பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதப்படை பெண் காவலரான இந்திராணி திருடனை விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பிடிப்பட்ட நபரிடம் பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த பாலாஜி(28) என்பதும் இவர் மீது ஏற்கனவே ஆவடி,சி.எம்.பி.டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பாலாஜி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு திருடனை பிடித்த பெண் காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories