தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி அதி கனமழை பெய்யும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் வரும் 10, 11ஆம் தேதிகளில் (ரெட் அலர்ட்) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவ.09 நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 11ஆம் தேதி அதிகாலை வட தமிழக கடற்கரையை நெருங்கும் ….
10, 11 தேதிகளில் எங்கு எவ்வளவு மழை பெய்யும்? இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல்…
சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும்.
ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 6 செமீ முதல் 20 செமீ மழை வரை அதிக மழை பெய்யும்.
மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரையிலான கனமழையைக் குறிக்கிறது.