Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்பூமி முன்பைவிட வேகமாக சுழல்கிறது: விஞ்ஞானிகள் தகவல்!

பூமி முன்பைவிட வேகமாக சுழல்கிறது: விஞ்ஞானிகள் தகவல்!

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இதனை ஒரு வருடம் என்கிறோம்.

நாட்களை துல்லியமாக கணக்கிடுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒரு நாளை சேர்த்து லீப் ஆண்டு என கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி வேகமாக சுழன்றுள்ளது.

அதாவது முன்பு ஒரு வருடம் என்பது 420 நாட்களை கொண்டதாக இருந்துள்ளது. தற்போது அதன் சுழலும் வேகம் குறைந்துள்ளதால், 365 நாட்களை கொண்ட ஒரு வருடமாக உள்ளது.

இந்த நிலையில், பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தற்போது பூமியின் சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அணுக்கடிகாரத்தின் வாயிலாக கண்டுபிடித்துள்ளனர்.

அணு கடிகாரம் மிகவும் துல்லியமானது மற்றும் முழுமையான பூஜ்ஜியத்திற்கு குளிரூட்டப்பட்ட அணுக்களில் எலக்ட்ரான்களின் இயக்கத்தை அளவிடுகிறது.

பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari