அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு (unorganized sector workers) பல சமூக பாதுகாப்புத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு e-SHRAM போர்ட்டலை கடந்த ஆகஸ்ட் 26, 2021 அன்று அறிமுகப்படுத்தியது.
அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான டேட்டாபேஸை (comprehensive database) உருவாக்க இந்த e-SHRAM போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இது மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்கவும் உதவும்.
இந்த போர்டல் அமைப்புசாரா துறையில் சுமார் 38 கோடி தொழிலாளர்களை பதிவு செய்ய முடியும். தொழிற்சங்கங்களுடன் ஒருங்கிணைத்து சமூக நல திட்டங்களை ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனிடையே அமைப்புசாரா துறையைச் சேர்ந்த சுமார்13 கோடி தொழிலாளர்கள் e-SHRAM குடும்பத்தில் இணைந்துள்ளனர்.
Directorate General Labour Welfare (DGLW) சமீபத்தில் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து e-Shram போர்ட்டலில் 13 கோடி ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டுள்ளது பற்றி ட்விட் செய்தது.
அந்த ட்வீட்டில், “e-Shram குடும்பத்தில் இணைந்த 13 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நன்றி” என்று கூறி இருந்தது.
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனுக்காக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்த தேசிய தரவுத்தளத்தை (national database) மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மேலும் அரசு சார்பில் e-SHRAM கார்டும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ESIC அல்லது EPFO-ல் உறுப்பினராக இல்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் (self-employed) அல்லது அமைப்புசாரா துறையில் (unorganized sector)பணிபுரியும் ஊதியம் வாங்குபவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆவர்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் அனைத்து சமூக பாதுகாப்பு சலுகைகளும் இந்த போர்டல் மூலம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அவசரகால மற்றும் தேசிய தொற்றுநோய் போன்ற சூழலில், தகுதியான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் இந்த போர்டல் மூலம் வழங்கப்படும்.
தவிர e-Shram போர்ட்டலில் தங்களை ரிஜிஸ்டர் செய்த பிறகு, அமைப்புசாரா தொழிலாளர்கள் PMSBY திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டையும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெறுகிறார்கள்.
இது ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் மையப்படுத்தப்பட்ட தரவு தளமாகும். அமைப்புசாரா துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த போரட்டலில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
போர்ட்டலில் பதிவு செய்ய விரும்பினால் நீங்கள் eshram.gov.in என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் eShram-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
ரிஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸை முடிக்க ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் பேங்க் அக்கவுண்ட் நம்பர் உள்ளிட்டவை தேவைப்படும்.
eShram போர்ட்டலில் ரிஜிஸ்டர் செய்வதற்கான படிகள்
eshram.gov.in (https://www.eshram.gov.in/.) என்ற eShram போர்ட்டலின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்
ஹோம் பேஜில் இருக்கும் Register on eSHRAM என்பதை க்ளிக் செய்யவும்
உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் captcha கோடை கொடுக்க வேண்டும். பின் send OTP என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
ரிஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸை முடிக்க உங்கள் பேங்க் விவரங்களை என்டர் செய்யுமாறு கேட்கப்படுவீர்கள்.
பயனாளிகளிடம் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல்லையென்றால் இலவச பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு அருகிலுள்ள CSC-க்குச் சென்று, Biometric authentication மூலம் உங்களை ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.