
சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண நிகழ்வுகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மணமகன் மற்றும் மணமகள் தொடர்பான வீடியோக்களை இணையவாசிகள் விரும்பிப் பார்க்கிறார்கள். தற்போதும் இது போன்ற ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது. இதில் மணமகன் மற்றும் மணமகளின் நடவடிக்கைகளை பார்க்க மிக வேடிக்கையாக உள்ளன.
இதைப் பார்ப்பவர்களால் இந்த வீடியோவிலிருந்து (Viral Video) பார்வையை அகற்ற முடியாது. இந்த வீடியோவில், மணமகனும் மணமகளும் திருமண மண்டபத்தில் அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது.
மணமகன் மணமகளுக்கு ஒரு இனிப்பை வழங்குகிறார். மீண்டும் மீண்டும் மணமகன் மணமகளுக்கு இனிப்பு அளிக்க முயற்சிப்பதால் மணமகள் கோபமடைகிறார்.
சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோ சில விநாடிகளையே கொண்டது. எனினும் இது இணையவாசிகளால் அதிகம் விரும்பப்பட்டு வருகின்றது.
மணமகன் ஊட்ட விரும்பும் இனிப்பை மணமகள் சாப்பிட விரும்பவில்லை. மணமகன் மீண்டும் மீண்டும் சப்பிடச்சொல்லி தொந்தரவு செய்கிறார். இதன் பிறகு மணமகள் செய்யும் செயலை யாராலும் நம்ப முடியவில்லை. கோபமடைந்த மணமகள் மணமகன் காலில் நன்றாக கிள்ளி விடுகிறார்.
மணமகள் கிள்ளியதையடுத்து மணமகனின் முகம் போகும் போக்கு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த ரியாக்சன் பார்ப்பதற்கு படு சூப்பராக உள்ளதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
மணமகன் மற்றும் மணமகளின் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் (Netizens) ஏராளமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர், ‘இப்படி வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்கக்கூடாது’ என்று எழுதியுள்லார்.’லவ் மொமெண்ட்’ என ஒருவர் எழுத, மற்றொருவரோ, ‘உனக்கு இது தேவையா மணமகனே’ என கிண்டலடித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
https://www.instagram.com/tv/CYOgiAJLO_n/?utm_source=ig_embed&utm_campaign=loading