
இணைய உலகம் ஆச்சர்யங்களையும், வியப்புக்களையும் அள்ளித் தருவதில் வல்லது. தினம் தோன்றும் அங்கு பகிரப்படும் வீடியோக்களில் சில, உங்கள் காண கிடைக்காத பொக்கிஷங்களாக இருக்கின்றன்.
அந்த வகையில் தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் புலி கம்பீரமாக நடந்து செல்வது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் புலி ஒன்று காட்சியளிக்கும் இந்த வீடியோ இணையத்தில் (Social Media) இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அழகான வீடியோ தமிழ்நாட்டின் வால்பாறையில் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வைரலாகும் இந்த வீடியோவை புகைப்படக் கலைஞர் ராஜ் மோகன் பிப்ரவரி 1ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தாவும் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்த வீடியோவும் வெற்றி பெற்றது.
புலி ஒன்று கம்பீரமாக நடந்து வந்து, பின்னர் அடர்ந்த காட்டுக்குள் தாவிச்சென்று மறைந்து செல்லும் வீடியோ ட்விட்டரில் மிகவும் வைரலாகி உள்ளது
கம்பீரமான புலி நெட்டிசன்களை மிகவும் கவர்ந்துள்ளது. பலர் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பயனர், “என்ன ஒரு கம்பீரமான நடை ராஜா உல்லாச நடை போடுவது போல் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இந்த அற்புதமான புலியைப் பார்ப்பதற்கு உங்களைப் போல் எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை” என பதிவிட்டுள்ளார்
Woke up to this at #valparai!
— Raj Mohan (@rajography47) January 31, 2022
As narrated by my wife-
Literally, woke up to a #tiger and stopped dead in my tracks for a few seconds when @rajography47 shouted 'Tiger Tiger Tiger' while I was fast asleep. Click below to read rest of the story. #TamilNaduhttps://t.co/9jcCxRiJ5F pic.twitter.com/7CEJAAxU6f





