
நடிகர் அர்ஜுன் தனது ட்விட்டரில் திருமணநாள் வாழ்த்துகளோடு பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் “ஆக்சன் கிங்” என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன் ஆவார். அர்ஜூன் நடிகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர் .
இவர் “சேவகன்” மற்றும் “ஜெய்ஹிந்த்” போன்ற படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான “ஹீரோ”, “இரும்புத்திரை” முதலிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.
அர்ஜூன் 1988ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
அண்மையில் அர்ஜூன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டதோடு கல்யாண நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
Happy anniversary my love..life is always beautiful with you. pic.twitter.com/ogZuqtdu44
— Arjun (@akarjunofficial) February 8, 2022