
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் ஜெயந்தி விஷ்ணு யாஷ் பெங்களூருவில் உள்ள கூகுள் இந்தியா அலுவலகத்தில் அதிக சம்பளத்தில் மென்பொருள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அக்சென்ச்சரில் ஆண்டுக்கு ரூ 8.50 லட்சம் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த ஜெயந்தி விஷ்ணு யாஷ் என்ற இளைஞருக்கு ஆண்டுக்கு ரூ 47.50 லட்சம் வழங்கப்படுகிறது, இது அவரது தற்போதைய ஊதியத்தை விட சுமார் 40 லட்சம் அதிகம்.
யாஷ் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள என்ஐடியில் ECE இல் பி.டெக் பொறியியல் முடித்தார். அவர் தனது படிப்பை முடித்தவுடன் அக்சென்ச்சரில் முதலில் இடம் பெற்றார். சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்ட இவர் 47.50 லட்சம் ஆண்டு சம்பளத்துடன் லெவல்-4 சீனியர் இன்ஜினியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். யாஷ் மார்ச் 7-ம் தேதி பெங்களூரில் இணைய உள்ளார்.
விஷ்ணுவின் தந்தை சத்ய நாராயண மூர்த்தி வார்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் வேதவல்லி இல்லத்தரசி. இவர்கள் விசாகப்பட்டினத்தில் நர்சிபட்டினம் நகரில் உள்ள வேலமா வீதியில் வசித்து வருகின்றனர். மகன் கூகுளுக்கு தேர்வானது குறித்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.