இந்தியா- இலங்கை இடையே இயங்கிய போட்மெயிலுக்கு வயது108-

இந்திய ரயில்வே வரலாற்றில் போட்மெயில்(Boatmail) ரயில் மிக பிரபலமான ரயிலாகும்.போட்மெயில்   தனது 108வது வயதில் அடியெடுத்து வைத்து சேவையை தொடர்கிறது.

சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே புதுக்கோட்டை வழியாக செல்லும் 16851/52 போட்மெயில் ரயில்  24/02/22 108 வது  பிறந்தநாளை சலனமின்றி கொண்டாடியது.

இந்த போட்மெயில் ரயிலின் வரலாறே சுவராஸ்யமான ஒன்றாகும்.கடந்த 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை எழும்பூர்- கொழும்பு இடையே #போட்மெயில்(Boatmail) ரயில் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை எழும்பூர்-தனுஷ்கோடி வரை ரயிலிலும், தனுஷ்கோடி-தலைமன்னார் வரை படகிலும் பிறகு தலைமன்னார்-கொழும்பு வரை ரயிலிலும் இயங்கிவந்துள்ளது. பகுதி ரயில் பகுதி படகில் பயணிப்பதாலேயே இந்த ரயிலுக்கு போட்மெயில்(Boatmail) என்று பெயர் வந்தது. மேலும் இந்தியாவையும் சிலோனையும் இணைத்ததால் இந்த ரயில் ‘இந்தோ-சிலோன் போட்மெயில்’ என்றே அன்றைய காலகட்டத்தில் மக்களால் அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சிலோனுக்கு வெறும் ரூ80  கட்டணத்தில் அன்றைய மக்கள் இந்த ரயிலில் பணித்துள்ளனர்.  இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 50 ஆண்டுகள் வரை இந்தியா/இலங்கை மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தாக வரலாறு கூறுகிறது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

22 டிசம்பர் 1964 ஆம் ஆண்டு தனுக்கோடியை தாக்கிய புயலின் போது 100 க்கு மேற்பட்ட பயணிகளுடன் பாம்பனிலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் புயலில்  சிக்கியது. பல ரயில் பெட்டிகள் கடலில் மூழ்கின. அதன் பிறகு தனுஷ்கோடி-பாம்பன் பாதை துண்டிக்கப்பட்டது.அதிலிருந்து  போட்மெயில் ரயில் ராமேஸ்வரம் வரை  மட்டுமே இயக்கப்பட்டுவருகிறது.

தனுஷ்கோடி-ராமேஸ்வரம் இடையே 17.2கிமீ தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த பாதை அமைக்கப்பட்டபின் போட்மெயில் ரயில் தனது பழைய நிலைக்கு திரும்பும் நாளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

IMG 20220225 113636 - 2026
IMG 20220225 113707 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories