வேலூரில் மோசடி போலி பெண் எஸ்.ஐ.கைது…

வேலுார் பகுதியில் பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த போலி பெண் எஸ்.ஐ.,யை போலீசார் வேலுாரில் இன்று கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு இந்திராநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் . இவர் வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ் கண்ணனிடம் கடந்த மாதம் 25ம் தேதி புகார் செய்தார். அதில், எஸ்.ஐ ரோகிணி என்பவர் குற்ற வழக்கு வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக 24 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். இதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வேலுார் காந்திசாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பெயர் ரோகிணி என்பதும், போலி எஸ்.ஐ.,யான இவர் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

போலீசார் நேற்று இரவு 11:30 மணிக்கு அவரை கைது செய்து, போலி அடையாள அட்டை, போலீஸ் உடைகளை கைப்பற்றினர். காஞ்சிபுரம் மாவட்ட, சுங்குவார் சத்திரத்தை சேர்ந்தவர் ரோகிணி,(32 )போலீஸ் உடையில், போலி போலீஸ் எஸ்.ஐ., அடையாள அட்டை தயாரித்துக் கொண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலை செய்வதாக பலரிடம் கூறியுள்ளார்.

போலீஸ் துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் தருவதாக தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடம் 24 லட்சம் ரூபாய் கடந்தாண்டு வாங்கிக் கொண்டு தலைமறைவானார். மேலும் பலரிடம் போலீசில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜாமினில் வந்த குற்றவாளிகளை சந்தித்து வழக்கிலிருந்து காப்பாற்றுவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவரை வேலூர் மாவட்ட போலீசார் கைதுசெய்தனர். இந்த மோசடிக்கு இவரது கணவர் சந்துரு(35) உடந்தையாக இருந்துள்ளார். சந்துருவை போலீசார் தேடி வருகின்றனர்.

IMG 20220301 WA0001 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 21 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Topics

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories