
காட்டின் நடைபெற்ற ஒரு சண்டை வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் சண்டையிடும் இந்த வைரல் வீடியோவில் இரண்டு மான்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதையும், இரண்டு மான்களின் சண்டையை, ஒரு சிறுத்தை தனக்கு சாதகமாக்க முயற்சிப்பதையும் காணலாம். சிறுத்தையின் கண்கள் மானை எப்படி தாக்கலாம் என்பதில் தான் உள்ளது
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் இரண்டு மான்கள் எப்படி ஒன்றுக்கொன்று பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்வதைக் காணலாம்.
இருவரின் சண்டையை ஒரு சிறுத்தை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அவர் உடனடியாக அங்கு பாய்ந்து வருகிறது.
மான்களுக்கு இடையே நடக்கும் சண்டையில், சிறுத்தை, மான்களை சுற்றி சுற்றி வருகிறது. மானை இரையாக ஆக்கிக்கொள்ளும் வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர் கொடுத்த தலைப்பில் : ” சண்டையில் சிக்கிக் கொண்ட மான்களின் கொம்புகள், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள பார்க்கும் சிறுத்தைப்புலி’ என எழுதியுள்ளார். உலகமும் அப்படித்தான் என குறிப்பிட்டுள்ளார்.
आपसी लड़ाई में हिरणों के सींग उलझ गये. मौके का फायदा उठाकर तेंदुआ उनपर हमला करने आ पहुंचा.
— Dipanshu Kabra (@ipskabra) March 2, 2022
दुनिया भी ऐसी ही है. आपसी लड़ाई में फायदा कोई और उठा ले जाता है.#सुप्रभात pic.twitter.com/VMrGLF9m4U