ஊட்டி குன்னுார் – மேட்டுப்பாளையம் சாலையில், யானை வழித்தடத்தில் சாலை விரிவாக்க பணி நடந்துவரும் நிலையில் அந்த வழியாக வந்த யானை தடுமாறி பள்ளத்தில் சரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னுார் – மேட்டுப்பாளையம் சாலையில், நந்தகோபால் பாலம் அருகே உள்ள யானை வழித்தடத்தில், நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதனால், யானைகள் இடம் பெயருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ரன்னிமேடு பகுதியில் முகாமிட்ட ஏழு காட்டு யானைகள் மாலைநேரத்தில் தண்ணீர் தேடி சாலையை கடந்தவருகிறது.இதில் யானைகள் வழி தெரியாமல் திணறின.யானைகள் கோபத்தில் வாகனங்களை விரட்டியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தடுப்புச்சுவர் அமைக்கும் இடத்தை யானைகள் கடக்க முயன்றபோது குட்டி யானை ஒன்று பள்ளத்தில் உருண்டு, ரயில் பாதையில் விழுந்தது.பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், அங்கு தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். யானைகள் செல்ல போதிய அளவில் வழி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






