தே .மு. தி .க நிறுவனத் தலைவரும் , கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் புதிய பதவி நியமனம் பற்றி அறிவித்துள்ளார்
அண்மையில் தே மு தி க., வில் உள்ள சில உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் பற்றிய புகார்களை தலைமைக்கு தெரிவிக்காமல் தாங்களாகவே இணையதளத்தில் தேவையற்ற கருத்துக்களை பரப்பி வந்தனர் ,இதையடுத்து தேமுதிக தலைமை அவர்களை கட்சியில் இருந்து நீக்கியது ,இந்நிலையில் இது போன்ற குறைகளை விசாரிக்க தேமுதிக தலைவருக்கு மிகவும் விசுவாசமும் ,நம்பிக்கையும் கொண்ட விழுப்புரம் எல்.வெங்கடேசனை விசாரணை குழு செயலாளராக விஜயகாந்த் நியமித்துள்ளார்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் தங்கள் மாவட்டத்தில் உள்ள எதிர்மறையான கருத்துக்களையும், குறைகளையும் விசாரணை குழுவில் மட்டும் தான் தெரிவிக்க வேண்டும்.இதற்கு தேசியமுற்போக்குதிராவிடகழகத்தின் விசாரணை குழு செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன் இன்று (07.02.2018) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்முழு ஒத்துழைப்பு தந்து, கழக வளர்ச்சிக்கு பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.என விஜயகாந்த் அறிவித்துள்ளார்
மேலும் கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து, கடலூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும் இன்று (07.02.2018) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்குதெற்கு மாவட்டம், ஒன்றிய, நகர,பேரூர்,வார்டு, ஊராட்சி, கிளைகழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள்முழு ஒத்துழைப்பு தந்து, கழக வளர்ச்சிக்கு பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். என அறிக்கையில் தெரிவித்துள்ளார்