Tamil News large 2993899 - 2026

பிரமோத் சாவந்த் கோவா மாநில முதல்வராக பதவியேற்பு.பிரதமர் மோடி பங்கேற்பு..

சற்றுமுன்

கோவா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.

கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனர். முதல்வர் பிரமோத் உடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கோவாவின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 11, சுயேச்சைகள் 3, ஆம் ஆத்மி 2, மகாராஷ்டிரவாதி கோமந்தக் 2, கோவா பார்வர்டு 1, புரட்சிகர கோன்ஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 21 எம்எல்ஏக் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏவின் ஆதரவு தேவைப் பட்டது. இந்த சூழலில் 3 சுயேச் சைகள், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தன

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இதைத் தொடர்ந்து கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தற் போதைய முதல்வர் பிரமோத் சாவந்த், மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அன்றைய தினம் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்த சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் 25 எம்எல்ஏக்களின் பட்டியலையும் அளித்தார். இந்நிலையில், கோவா தலைநகர் பனாஜியில் அமைந்துள்ள ஷியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் இன்று புதிய அரசு பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Tamil News large 2993899 - 2026
782136 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.