ஏப்16-ல் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல்.‌

பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. ஏப்14-ல் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.16-ந் தேதி அதிகாலை 5.50 மணிக்குமேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். 
சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக தல்லாகுளம் பிரசன்ன வெங் கடாசலபதி பெருமாள் கோவிலின் சன்னதி முன்பாக கொட்டகை முகூர்த்த விழா நடைபெற்றது.
இதில் கோவில் மண்டப வளாகத்தில் யாழி திருமுகத்திற்கு முன்பாக நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள், வைத்து, நூபுர கங்கை தீர்த்தத்தால், அபிஷேகம் பட்டர்களின் வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க நடந்தது. 

பின்னர் மங்கள இசையுடன், வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை, மாலைகளுடன் இணைக்கப்பட்டு கோவில் உள்பிரகாரம், மற்றும் வெளிப்புறம் உள்ள ராஜ கோபுரம் முன்பாகவும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மண்டபங்கள் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது. வருகிற ஏப்14-ல் கள்ளழகர் பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படு கிறார். 

தொடர்ந்துஏப் 15-ந் தேதி கள்ளழகர் எதிர் சேவை மதுரை மூன்று மாவடியில் நடைபெறுகிறது. 16-ந் தேதி அதிகாலை 5.50 மணிக்குமேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத் திலும், அன்றிரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலிலும் சுவாமி எழுந்தருள்கிறார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

17-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் காட்சி தருகிறார். அதன் பின்னர் கருட வாகனத்தில் எழுந் தருளி தேனூர் மண்டபத்தில் மாலை 3 மணிக்கு மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், நடைபெறும். அன்றிரவு திவான் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

18-ந் தேதி காலையில் மோகனவதாரத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். 19-ந் தேதி இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளல், 20-ந் தேதி காலையில் பிரியாவிடை பெற்று கள்ளழகர் பல்லக்கு பரிவாரங்களுடன் அப்பன் திருப்பதி வழியாக கள்ளழகர் கோவிலுக்கு செல்கிறார்.

 பின்னர் அன்று பகல் 1.30 மணிக்குள் அழகர் மலைக்கு கள்ளர் திருக்கோலத்தில் வந்து சேருதல். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கடந்த 2 வருடமாக கொரானா தொற்று காரணமாக சித்திரை திருவிழா, அழகர்கோவிலுக்கு உள்ளேயே அரசு வழிகாட்டுதல்படி நடந்தது. 2 வருடத்திற்கு பிறகு கள்ளழகர் இந்த வருடம் சித்திரை மாத திருவிழாவிற்கு மதுரைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
images 2022 04 02T172332.534 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories