images 2022 04 02T171629.351 - 2026

தமிழகத்தில் வெயிலும் சில பகுதிகளில் மிதமான மழையும் இருக்கும்..

சற்றுமுன்

தமிழகத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்சமாக அதிகரிக்கக்கூடும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் ஏப் 6 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி பர்லியார்2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

images 2022 04 02T171629.351 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.