பஸ்ஸை வழிமறித்த காட்டு யானை! கூலா கேண்டில் செய்த டிரைவர்!

Published:

elephant - 2026

கேரளாவில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒரு யானை, அதன் கண்ணாடியை அதன் தந்தத்தால் உடைத்ததை காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

புதன்கிழமை மாலை, 50 பயணிகளுடன் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் வீடியோவில், சாலையில் யானை நடந்து செல்வதைக் கண்டு, அரசுப் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து, யானை பஸ்ஸை நோக்கி வந்ததால், உள்ளே இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

காட்டு யானை, கண்ணாடியை சிறிது சிறிதாக உடைத்தது, ஆனால் ஓட்டுனர் பதற்றமில்லாமல் கூலாக ஜாண்டில் செய்தார். அதிர்ஷ்டவசமாக, யானை மேலும் சேதத்தை ஏற்படுத்தாமல் காட்டிற்கு திரும்பியது. ஓட்டுநர் தனது பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

யானை ஒன்று கோபமாக பஸ்ஸை மறிக்கும் வைரல் வீடியோவை தமிழக சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அவர் தனது பதிவில், ‘இந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் யார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் நிச்சயமாக மிஸ்டர் கூல் எனலாம். யானையின் கண்காணிப்புச் சோதனையை அவர் கையாண்ட விதத்தை பார்த்தால், இது வழக்கமாக அவர்களுக்கு இடையே பிஸினஸ் போல இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த யானை படையப்பா என்று அன்புடன் அழைக்கப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. இந்த வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது.

பஸ் டிரைவரின் சமயோஜித சிந்தனை, கூலாக நிலைமையை கையாண்ட விதத்தை மக்கள் பாராட்டியுள்ளனர். சிலர் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதல் குறித்து கவலை தெரிவித்தனர்.

“டிரைவருக்கு உண்மையிலேயே தைரியம் தான்! நான் இந்த இடத்தில் இருந்தால், நிச்சயம் இதை செய்திருக்க மாட்டேன்… பயந்து போயிருப்பேன்!! ஆனால் பார்க்க அழகாக இருக்கிறது! ” ஒரு பயனர் ட்வீட் செய்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img