கேரளா காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக
காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூடவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம்பெண் இறந்தார், உள்ளூர் உணவகத்தில் பரிமாறப்பட்ட ஷவர்மா உணவில் விஷம் கலந்து இறந்தார். கரிவள்ளூரைச் சேர்ந்த நாராயணன் மற்றும் பிரசன்னா தம்பதியரின் மகள் தேவானந்தா (16) என்பவரே உயிரிழந்துள்ளார். உணவில் விஷம் கலந்ததால், சிறுமி காஞ்சங்காட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.கண்ணங்காட்டில் உள்ள ஐடியல் கூல்பாரில் ஷவர்மா சாப்பிட்ட 31 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அந்த உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 45 பேருக்கு பாதிப்பு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டநிலையில்
உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் இருவரையும் கைது செய்து உணவகத்திற்கு சீல்வைத்தது மாவட்ட சுகாதாரத்துறை.






