வருமான வரித்துறை சோதனையில் ரூ.56 கோடி 32 கிலோ நகைகள் ,ரூ.100 கோடி சொத்து பறிமுதல்..

gallerye 133241612 3097657 - 2026

மஹாராஷ்டிராவில் வணிக குழுமம் ஒன்றில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.56 கோடி பணம்,32 கிலோ தங்கம், வைரம், முத்து நகைகளும், சில முதலீடு பத்திரங்களும் உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள இரும்பு, ஆடை மற்றும் கட்டுமான தொழில்கள் அடங்கிய வணிக குழுமம் ஒன்று வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறை திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த வணிக குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சுமார் 260 வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையை துவங்கினர்.

இதில் அலுவலகம் ஒன்றில் இருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருமானத்தை மறைத்து வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.இந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளில் ரூ.56 கோடிக்கு கட்டுகட்டாக பணமும், 32 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், முத்து நகைகளும், சில முதலீடு பத்திரங்களும் இருந்தன.

பணத்தை எண்ணி முடிக்கவே அதிகாரிகளுக்கு 13 மணி நேரம் ஆனதாம்.இவ்வளவு இடங்களில் ஒரே நேரத்தில் 260 அதிகாரிகள் சோதனையில் இறங்கியதும், அதில் கட்டுகட்டாக இவ்வளவு பணம் உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதும் அம்மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories