
இந்தியாவில் பிரசித்தி பெற்ற இந்து வழிபாட்டுத் ஸ்தலங்களில் ஒன்றான சபரிமலையில் பிரசித்தி பெற்ற 41 நாள் மண்டல பூஜை திருவிழா வரும் நவம்பர் 17ஆம் தேதி துவங்குகிறது.இதற்காக வரும் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெறும் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பனுக்கு முக்கிய நிகழ்வாக தங்கு அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் வரும் டிசம்பர் 27ஆம் தேதி பகலில் ஐயப்பனுக்கு மண்டலபிஷேகம் களபாபிஷேகம் நடத்தி தங்கி அணிவித்து மண்டல பூஜை விமர்சையாக நடைபெறும் அன்று இரவு 41 நாள் பூஜைகள் நிறைவு செய்து கோவில் நடை அடைக்கப்படும்.
மீண்டும் சபரிமலை கோவில் பிரசித்தி பெற்ற மகரஜோதி விழாவுக்காக வரும் டிசம்பர் 30ஆம் தேதி நடைதிறக்கப்படும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் மகரஜோதி பூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு துவங்கி நடைபெறும் பிரசித்தி பெற்ற மகர விளக்கு தரிசனம் வரும் 2023 ஜனவரி 14 ல் நடைபெறும் வரும் ஜனவரி 23 ஆம் ஆண்டில் ஜன 20 ஆம் தேதி வரை மகரமாத பூஜைகள் நடத்தி கோவில் நடை திறந்திருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோயில் 2023இல் நடை திறந்து பூஜை வழிபாடுகள் நடைபெறும் விபரம்..
மாதாந்திர பூசையாக மாசி மாத பூஜைக்கு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை நடை திறந்து 17ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் .பங்குனி மாத பூஜைக்கு மார்ச் 14ஆம் தேதி நடை திறந்து 19ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும் .பங்குனி உத்திரம் உற்சவத்திற்காக வரும் மார்ச் 26 ஆம் தேதி கோவில் நடை திறந்து 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆராட்டு உற்சவம் துவங்கும் வரும் ஏப் 5ஆம் தேதி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா பம்பை நதியில் நடைபெறும் அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
சித்திரை விசு உற்சவத்திற்காக வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு 19ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும் .சித்திரை விசு விழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் அன்று அதிகாலை ஐயப்பன் கோவில் நடை திறந்து விசு கனி காணும் விழாவும் கை நீட்ட பிரசாதம் வழங்கும் விழாவும் நடைபெறும்.
வைகாசி மாத பூஜைக்கு வரும் மே 14 ஆம் தேதி நடைதிறந்து மே 19ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும்.வரும் மே 29 இல் நடைதிறந்து பிரதிஷ்டை தின பூஜை வழிபாடு 30ஆம் தேதி நடத்தி அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக வரும் ஜூன் 15ஆம் தேதி நடை திறந்து இருபதாம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் .ஆடி மாத பூஜைக்கு ஜூலை 16 இல் நடை திறந்து ஜூலை 21 வரை பூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடைபெறும் .
ஆவணி மாத பூஜைக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை நடைதிறந்து ஆகஸ்ட் 21 வரை பூஜைகள் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகைக்காக ஆகஸ்ட் 27ஆம் தேதி நடை திறந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை சபரிமலையில் பூஜை வழிபாடு நடைபெறும்.
புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது 22 ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17ஆம் தேதி நடை திறந்து 22 ஆம் தேதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெறும் ஸ்ரீ சித்திரை அட்ட திருநாளுக்காக நவம்பர் 10ஆம் தேதி நடை திறந்து நவ11ஆம் தேதி சித்திரை அட்டத் திருநாள் பூஜை வழிபாடு நடைபெறும். அன்று இரவு கோயில் நடை அடைக்கப்படும்.
2023 மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி மாலை நடை திறந்து டிச27 ஆம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறும் 2023 மகர விளக்கு வைபோகத்திற்கு நடைதிறப்பு டிசம்பர் 30ல் மாலை நடை திறக்கப்படும்.2024ல் ஜனவரி 15ஆம் தேதி மகரஜோதி வழிபாடு நடைபெறும்.