காஷ்மீர்-2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

Published:

images 70 - 2026

காஷ்மீர் மாநிலம் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சோதனையின் போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டனர். தொடர்ந்து நடந்த மோதலில் 2 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்முவில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் தவி பாலத்தில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.  அப்போது, லாரிக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி லாரியில் இருந்து குதித்து தப்பியோடினர்.

இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img