
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்னும் சில மணி நேரங்களில் இன்று மாலை மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து டிச.27-ம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் மண்டல பூஜையைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் உள்ளிடவை நடைபெறும். பிற்பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாட்டுடன் இரவு 11.30 மணியளவில் நடை சாத்தப்படும்.
மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை சமயத்தில் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவை பக்தர்கள் செய்துகொள்ளலாம். இன்று முதல் ஜனவரி 20-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.பக்தர்கள் ஜன19வரைசுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்து போகலாம். என்று சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது. முக்கிய விழாவாக வரும்ஜன11இல் எருமேலிபேட்டை துள்ளல்,ஜன12இல் பந்தளத்தில் திருபாவரணம் புறப்பட்டு நடைபயணமாக ஜன14இல் சபரிமலை சென்றடையும்.ஜன13இல் பம்பா விளக்கு ஜன14முதல் ஜன19வரை மளிகப்புறம் மஞ்சமாதா கோயில் திருவிழா கொடிபட்டத்துடன் துவங்கி நடைபெறும்.





