
தன் தாயார் உடலை தகனம் செய்த அடுத்து உடனடியாக மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் பல்வேறு திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி இன்று திட்டமிட்டபடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) உடல்நலக்குறைவால் இன்று(டிச.30) காலமானார். தாயார் மறைவையடுத்து ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தாயின் உடலை சுமந்து வந்து இறுதிச் சடங்கு செய்தார்.இதையடுத்து திட்டமிட்டபடி பிரதமர் மோடி இன்றைய அரசு நிகழ்ச்சிகளில் காணொலி வழியாக பங்கேற்கிறார்.
அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமா் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கிவைத்தார். ஹௌரா- நியூ ஜல்பைகுரி இடையே இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், முன்னதாக தில்லி-வாராணசி, தில்லி-ஜம்மு, மும்பை-காந்திநகா், சென்னை-மைசூரு உள்ளிட்ட 6 தடங்களில் தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறினார்.
என் தாய் எந்த அரசு பொறுப்பையும் வகித்ததில்லை. எந்த விதமான அரசு மரியாதையையும் எனது தாயாருக்கு செய்ய கூடாது.அரசாங்க பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே செய்ய வேண்டிய மரியாதையை எனது குடும்பத்துக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.”
என கூறி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்து எந்த விஐபி வருகைக்காவும் காத்து இருக்கவில்லை.பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் கொடுக்காமல்.தகன நிகழ்வு நடந்தது.உங்கள் பிராத்தனைகளில் அவரை நினைத்து கொண்டு ,உங்கள் அன்றாட பணிகளை தொடருங்கள் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
என்று நாட்டின் பிதாமகனின் தாயாரின் இறுதி சடங்கு வெரும் ஒரு 10 /15 பேரை கொண்டு நடந்தது.
மீண்டும் தான் ஒரு நாட்டின் சாதாரண சேவகன் என்று நிரூபித்துள்ளார் மோடி என்ற மகான்
எப்பேற்பட்ட மாவீரனை,கர்ம யோகியை இந்த பூமிப்பந்திற்கு வழங்கிய தாய்.அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் என பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து கொண்டது சிறப்பு ஆகும்.






