December 11, 2025, 10:00 PM
25.5 C
Chennai

தமிழகத்தில் பட்டதாரி இல்லாத வருவாய்துறை அதிகாரிகள் பதவி இறக்கம்..

1863713 19 - 2025
#image_title

தமிழகத்தில் பட்டதாரி இல்லாத 200-க்கும் மேற்பட்ட வருவாய்துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு குரூப்-2 தேர்வு மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்கள் பட்டப்படிப்பு தகுதியாக கொண்டவர்கள். இவர்கள் 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு துணை தாசில்தார் பதவி உயர்வை அடைவர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயரக்கூடும்.

இதுதவிர வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்றவர்கள் குரூப்-4 தேர்வு மூலம் தேர்வாகி பணியாற்றி வருகிறார்கள். இவர்களும் வருவாய் ஆய்வாளராகவும், துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஒ போன்ற உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற முடியும். 1995-ம் ஆண்டு 133 அரசாணையின்படி நேரடியாக வருவாய் அலுவலராக பணிநியமனம் பெற்றவர்களுக்கு பட்டதாரிகள் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதை எதிர்த்து பட்டதாரி அல்லாத வருவாய்த்துறை அலுவலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருவாய் ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது செல்லும்.

நேரடியாக நியமனம் அல்லாத வருவாய் ஆய்வாளர்கள் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் முன்னுரிமை வழங்கலாம். பட்டதாரிகளாக இல்லாதவர்களுக்கு முன்னுரிமை கிடையாது என்று தெரிவித்தது. 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நேரடி நியமன வருவாய் ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை செல்லும் என்று உறுதிப்படுத்தியது.

கடந்த 15 ஆண்டுகளாக வழக்குகளால் தாமதம் ஆன வருவாய் துறையில் ஏற்பட்ட பதவி உயர்வு குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த காலங்களில் இளநிலை உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஒ வரை சென்றுள்ளனர். பட்டதாரிகள் அல்லாமல் பதவி உயர்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

அவர்களை தற்போது பதவி இறக்கம் செய்யக் கூடிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட கோட்ட அதிகாரிகளாகவும், ஆர்.டி. ஏ.க்கள் தாசில்தாராகவும் பதவி இறங்குகிறார்கள். ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தாசில்தார்கள், துணை தாசில்தார் பதவிக்கு தரம் இறக்கப்பட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்க மாநில தலைவர் சையது அபுதாகீர் கூறுகையில், ‘துணை ஆட்சியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டு களாக வழங்கப்படவில்லை.

அந்த பதவி உயர்வு வழங்கினால் அந்த இடங்களுக்கு பலர் வர வாய்ப்பு உள்ளது. அதனால் ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஓ.க்கள் பதவி உயர்வு பெறுவார்கள். அவர்கள் இடங்களுக்கு தாசில்தார் பதவி உயர்வு பெறுவார்கள். தகுதி இறக்க நடவடிக்கையின் மூலம் பாதிக்கக்கூடும். அதிகாரிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories