
சிவகாசியில் உடற்பயிற்சி அதிகாரிகள் என மிரட்டி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் மதுரை திருவள்ளுவர் நகரைச்சேர்ந்தவர் சாமிராஜ்(வயது 30), தினமணி நகரை சேர்ந்தவர்மார்க்கரெட் இன்சென்ட்ஜெனிபர் (வயது28), வில்லாபுரத்தை சேர்ந்தவர் ரங்கராஜ்( வயது 26). இவர்கள் மூவரும் தங்களைஉடற்பயிற்சி கூடங்களை ஆய்வு செய்யும் மதுரை அதிகாரிகள் என தெரிவித்து சிவகாசிவட்டாரத்தில் உள்ளஉடற்பயிற்சிக் கூடங்களை நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது உடற்பயிற்சி கூடங்கள் நடத்தஉரிமம்உள்ளதா? பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பதற்குண்டான சான்றிதழ் பெற்றுள்ளனரா? உடற்பயிற்சி எடுத்துக்கொள்ள வருபவர்களுக்கு சத்தாண உணவு வகைகள் வழங்கப்படுகிறதா? முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விக் கணைகளை உடற்பயிற்சிகூடம் நடத்தும் நிர்வாகிகளிடம் தொடுத்து முறையான பதிலளிக்காத உடற்பயிற்சி கூடத்தினரிடம் தாங்கள் அபராதம் விதிக்கப் போவதாக மிரட்டி, கூடத்தினரிடமிருந்தும் ஆயிரக் கணக்கில் பணம் வசூலித்து, கடந்த2 மாத காலங்களில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று சுருட்டி உள்ளனர்.

பின்பாக இவர்கள்மூவரும் போலியானவர்கள்என தகவல் தெரிந்து ஏற்கனவேபணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மற்று முள்ள உடற்பயிற்சிகூடம் நடத்துபவர்களிடம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தநிலையில், மீண்டும் போலியான உடற்பயிற்சி அதிகாரிகள் மூவரும் சிவகாசிக்கு வந்து சிவமுருகன் என்பவரின் உடற்பயிற்சி கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏற்கனவே பணம்கொடுத்து ஏமாந்தவர்கள் இவர்கள் குறித்து தகவலறிந்து மூவரையும் பிடித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார் மூவர்மீதும் வழக்கு பதிவு செய்து இவர்கள் இன்னும் எங்கெங்கு சென்று பணம் மோசடி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பண மோசடிசம்பவம் சிவகாசி வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.